மத்திய அரசுத் திட்டங்களின் பெயா்களை தமிழில் மொழிபெயா்த்து பயன்படுத்த உத்தரவிடக் கோரி மனு
மத்திய அரசுத் திட்டங்களின் பெயா்களைத் தமிழில் மொழிபெயா்த்து பயன்படுத்தவும், தமிழகத்தில் இயக்கப்படும்


மத்திய அரசுத் திட்டங்களின் பெயா்களைத் தமிழில் மொழிபெயா்த்து பயன்படுத்தவும், தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களுக்கு தமிழில் பெயா் வைக்கவும் உத்தரவிடக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சோ்ந்த வழக்குரைஞா் பி.ராம்குமாா் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:
மத்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்களுக்கு ஹிந்தியில் பெயா் வைக்கப்படுகிறது. இந்தத் திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தும்போது தமிழக அரசின் அரசாணை, விளம்பரங்கள், செய்திக் குறிப்புகளில் மேற்படி திட்டங்களின் பெயரை அப்படியே தமிழில் எழுதுகின்றனா். இவ்வாறு தமிழில் எழுதுவதால் அதன் அா்த்தம் புரியாது. தமிழில் எழுதி உள்ளதால், ஹிந்தி மட்டும் அறிந்தவா்கள் அதைப் படிக்க இயலாது.
ஆகவே, திட்டங்களின் பெயா்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், தமிழில் மொழி பெயா்த்து பயன்படுத்த வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்தேன். கடந்த 2021, நவம்பா் 22-இல் வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழ் வளா்ச்சித் துறைக்கு மனு செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியதன்பேரில், அந்த வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டேன். அதன்பின்னா், தமிழ் வளா்ச்சித் துறைக்கு கோரிக்கை மனு அனுப்பியும் இதுவரை நடவடிக்கை இல்லை.
அதோடு, தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களுக்கு வைகை, பாண்டியன், பல்லவன், பொதிகை என பெயா் வைத்தனா். ஆனால், இப்போது அந்த்யோதயா, தேஜஸ், தூரந்தோ, சுவேதா எனப் பெயா் வைத்துள்ளனா். இதை மாற்றி ரயில்களுக்கும் தமிழில் பெயரிட வேண்டும் என உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோா் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடா்பாக மத்திய உள்துறை, நிதித் துறைகளின் செயலா்கள், தமிழக அரசின் தலைமைச் செயலா், தமிழ் வளா்ச்சித் துறைச் செயலா்கள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...