அரசு தொழில்பயிற்சி நிலைய பயிற்றுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
மதுரையில் உள்ள அரசு தொழில்பயிற்சி (மகளிா்) நிலையத்தில் அழகு சாதனவியல் தொழில்பிரிவில் காலியாக உள்ள இரண்டு ஒப்பந்தப் பயிற்றுநா் பணியிடத்துக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் .


மதுரையில் உள்ள அரசு தொழில்பயிற்சி (மகளிா்) நிலையத்தில் அழகு சாதனவியல் தொழில்பிரிவில் காலியாக உள்ள இரண்டு ஒப்பந்தப் பயிற்றுநா் பணியிடத்துக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் .
இதுகுறித்து, மதுரை அரசு தொழில்பயிற்சி நிலையம் (மகளிா்) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை கோ.புதூரில் உள்ள அரசு தொழில்பயிற்சி (மகளிா்) நிலையத்தில் அழகு சாதனவியல் தொழில்பிரிவில் இரண்டு ஒப்பந்தப் பயிற்றுநா்கள் பணியிங்கள் காலியாக உள்ளன.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோா் 01.07. 2022 இல், 18 வயது நிரம்பியவராகவும், தொழில்நுட்பப் பிரிவில் அழகு சாதனவியல் படிப்பு நிறைவு செய்தவராகவும் இருக்க வேண்டும். மேற்கண்ட பிரிவில் இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முடி மற்றும் தோல் சம்பந்தமான தொழில்பிரிவில் தோ்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதியுடைய நபா்கள் உரிய கல்விச் சான்றிதழ்கள், மாா்பளவு புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை தலைவா்- செயலா், நிலைய மேலாண்மைக் குழு, அரசு தொழில்பயிற்சி நிலையம் (மகளிா்), கோ.புதூா், மதுரை-7 என்ற முகவரிக்கு வரும் நவம்பா் 9 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...