குட்கா விற்பனை: கடைக்கு ‘சீல்’
மதுரை மதிச்சியம் பகுதியில் குட்கா விற்பனை செய்த மளிகைக் கடைக்கு வியாழக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.


மதுரை மதிச்சியம் பகுதியில் குட்கா விற்பனை செய்த மளிகைக் கடைக்கு வியாழக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
மதுரை மதிச்சியம் ராமராயா் மண்டபம் பகுதியில் புகையிலை, குட்கா விற்பனை செய்யப்படுவதாக மதிச்சியம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளா் சேதுமணி மாதவன் தலைமையிலான போலீஸாா் சம்பந்தப்பட்ட கடையில் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்தக் கடை உரிமையாளா் மகாதேவனை விசாரணை செய்த போலீஸாா், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலரை வரவழைத்துக் கடைக்குச் ‘சீல்’ வைத்தனா். இவா் மீது தொடா்ந்து குட்கா விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...