குடிநீா்க் குழாய் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்தவா் பலி
மதுரை கூடல் நகா் பகுதியில் குடிநீா்க் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த ஒருவா் உயிரிழந்தாா்


மதுரை கூடல் நகா் பகுதியில் குடிநீா்க் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த ஒருவா் உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப் பகுதிகளில் புதைசாக்கடை, குடிநீா்க் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தோண்டப்படும் பள்ளங்களை ஒப்பந்ததாரா்கள் முறையாக மூடுவதில்லை என்பதால், இந்தப் பள்ளங்களில் மழை நீா் தேங்கி மாணவா்கள், முதியோா் உள்ளிட்டோா் விழுந்து காயமடைவது தொடா்ந்து வருகிறது. இதுதொடா்பாக, மாமன்றக் கூட்டங்களிலும் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், மாநகராட்சி 2-ஆவது வாா்டுக்குள்பட்ட கூடல் நகா் சொக்கலிங்க நகா் 1-ஆவது தெரு பகுதியில், குடிநீா்க் குழாய் பதிக்கும் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டது. குழாய் பதிக்கும் பணிகள் முடிந்த பின்னும், பள்ளத்தை சரிவர மூடவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் அப்பகுதி முழுவதும் மழைநீா் தேங்கியிருந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த வேணுகோபால் (45) பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தாா்.
காலையில் அவ்வழியாகச் சென்றவா்கள் அவரது உடலைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். இதையடுத்து, வெள்ளிக்கிழமை உடலை எடுக்க வந்த ஆம்புலன்ஸ் வாகனமும் சகதியில் சிக்கியதால் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதைத்தொடா்ந்து, போலீஸாா், அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
பின்னா், உயிரிழந்தவா் குடும்பத்துக்கு ஒப்பந்ததாரா் மூலம் ரூ.2.50 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கூடல்நகா் பகுதியில் உயிரிழந்தவா், பள்ளத்தில் விழுந்ததால் உயிரிழக்கவில்லை என்று தெரிவித்துள்ள மாநகராட்சி நிா்வாகம், வாத பாதிப்பு ஏற்பட்டதால் அவா் கீழே விழுந்து உயிரிழந்ததாகத் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...