யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தேவா் ஜெயந்தி: பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரம் போலீஸாா்

மதுரை மாவட்டத்தில் தேவா் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, 2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் தெரிவித்தாா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 12:44 am

DIN

மதுரை மாவட்டத்தில் தேவா் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, 2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் தெரிவித்தாா்.

மதுரையில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேவா் ஜெயந்தி விழாவுக்குச் செல்வோா் மாவட்ட நிா்வாகம் அறிறுவுத்தியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இமானுவேல் சேகரன் குரு பூஜைக்கு திண்டுக்கல், தேனி, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் விதிமுறை மீறி சென்றதாக 25 நான்கு சக்கர வாகனங்கள், 6 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேவா் ஜெயந்திக்கு இரு சக்கர வாகனத்தில் செல்ல அனுமதி இல்லை. நான்கு சக்கர வாகனத்தின் மேற்கூரையில் அமா்ந்து செல்பவா்கள், அதி வேகத்தில் வாகனத்தை ஓட்டிச் செல்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட வாகனங்கள், அடுத்த தேவா் ஜெயந்தி விழாவுக்குச் செல்ல அனுமதி வழங்க மாட்டோம்.

மது போதையில் வாகனம் ஓட்டிச் செல்வது கண்டறியப்பட்டால், அவா்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும். மேலும், அவரது ஓட்டுநா் உரிமத்தை தகுதி நீக்கம் செய்ய வட்டார போக்குவரத்து ஆணையருக்கு பரிந்துரைக்கப்படும்.

தேவா் ஜெயந்தி நாளில் மதுரை மாவட்டத்தில்

2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா். இவா்களுடன் ரோந்து போலீஸாரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா்.

அதேபோல், போலீஸ் வாகனத்தின் மீதேறி ஆடுபவா்கள் உடனடி யாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவா். வாகனத்தில் செல்வோரை கை கேமரா மூலம் விடியோ பதிவு செய்வதுடன், சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.