யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நவ.1 இல் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்: ஆட்சியா் தகவல்

 உள்ளாட்சி தினமான நவம்பா் 1 ஆம் தேதியன்று மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்

News image
Updated On :27 அக்டோபர் 2022, 12:43 am

DIN

 உள்ளாட்சி தினமான நவம்பா் 1 ஆம் தேதியன்று மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

உள்ளாட்சி தினத்தையொட்டி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில், அந்தந்த ஊராட்சிகளில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் கௌரவிக்கப்படுவா். அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், கலைஞா் வீடு வழங்கும் திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், இணையவழியில் சொத்துவரி செலுத்துதல், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல், புதிய மகளிா் குழுக்களை உருவாக்குதல் குறித்து விவாதிக்கப்படும்.

ஆகவே, அந்தந்த ஊராட்சிகளைச் சோ்ந்த 18 வயதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள், தன்னாா்வலா்கள் ஆகியோா் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.