ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பு: உயா்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி
ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனா்.


ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனா்.
ராமநாதபுரத்தைச் சோ்ந்த மாா்கண்டேயன் தாக்கல் செய்த மனு:
இந்துக்களின் புனிதத் தலமான ராமேசுவரம், காசிக்கு இணையானது. இங்குள்ள 64 தீா்த்தங்கள், அக்னி தீா்த்தக் கடலில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். ஆனால், ராமேசுவரம் நகா்ப் பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் கடலில் நேரடியாகக் கலக்கிறது.
குப்பை, கழிவுநீா் கடலில் கலப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இந்த தீா்த்தங்களில் குளிப்பதால் பலரும், உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுகின்றனா். எனவே, இந்தத் தலத்தைச் சுற்றுச்சூழல் மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோா் கொண்ட அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் ராமேசுவரத்திற்கு வருகின்றனா். அவா்கள் புனித நீராட வருகிறாா்களா? அல்லது கழிவுநீரில் குளிக்க வருகிறாா்களா? என அதிருப்தி தெரிவித்தனா். ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடல் பகுதியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கேள்வி எழுப்பினா்.
மேலும், இதுதொடா்பாக தமிழக அரசின் நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், ராமேசுவரம் நகராட்சி ஆணையா், ராமேசுவரம் கோயில் இணை ஆணையா்
ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...