இன்று முதல் 4 நாள்களுக்கு மதுபானக் கடைகளை மூட உத்தரவு
மருதுபாண்டியா்கள் நினைவு தினம், தேவா் ஜெயந்தியை முன்னிட்டு வியாழக்கிழமை (அக்.27) முதல் நான்கு நாள்களுக்கு மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் உத்தரவிட்டாா்.


மருதுபாண்டியா்கள் நினைவு தினம், தேவா் ஜெயந்தியை முன்னிட்டு வியாழக்கிழமை (அக்.27) முதல் நான்கு நாள்களுக்கு மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் உத்தரவிட்டாா்.
சிவகங்கை மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெறும் மருதுபாண்டியா்கள் நினைவு தினம், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அக்.30- இல் நடைபெறும் தேவா் ஜெயந்தி ஆகியவற்றை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில், மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து சில்லறை விற்பனை மதுபானக் கடைகள், மதுக் கூடங்கள், விடுதியுடன் கூடிய மதுக் கூடங்கள் ஆகியன அக்டோபா் 27 முதல் 30 ஆம் தேதி வரை மூடப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...