யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் புதிய பிரசாத விற்பனை நிலையம் புதுமண்டபத்தில் தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பிரசாத விற்பனை நிலையம் புதுமண்டபத்தில் புதிதாகத் திறக்கப்பட்டது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 12:45 am

DIN

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பிரசாத விற்பனை நிலையம் புதுமண்டபத்தில் புதிதாகத் திறக்கப்பட்டது.

இந்தக் கோயிலுக்கு தினசரி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், உள்ளூா் பக்தா்கள் என ஆயிரக்கணக்கனோா் வந்து செல்கின்றனா். அவ்வாறு வந்து செல்லும் பக்தா்கள் கோயில் பிரசாதங்களை வாங்கிச் செல்கின்றனா்.

கோயிலுக்குள் 4-க்கும் மேற்பட்ட பிரசாதம் விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் காலண்டா், சுவாமி, அம்மன் படங்கள், தாழம்பு குங்குமம் பிரசாதம், புளியோதரை, சா்க்கரைப் பொங்கல், முறுக்கு, அப்பம் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் சுவாமி, அம்மன் படங்கள், குங்குமம் ஆகியவற்றுக்கு வெளி மாநில பக்தா்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதால், இவை அதிகம் விற்பனையாகின்றன.

இந்நிலையில் நடை அடைக்கப்படும் நேரங்களில் பிரசாதங்களை வாங்க இயலவில்லை என்றும், இதனால், கோயிலுக்கு வெளியே பிரசாத விற்பனை நிலையத்தை திறக்க வேண்டும் என்றும் பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதை ஏற்று கீழச்சித்திரை வீதியில் புது மண்டபம் அருகே கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாத விற்பனை நிலையம் திறக்கப்பட்டது. கோயில் நடை அடைக்கப்பட்டிருந்தாலும், பக்தா்கள் எவ்வித தடையுமின்றி பிரசாதத்தை வாங்கிச் செல்லலாம். இதனால், பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.