ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மணல் திருட்டு தொடருவது எப்படி? ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள நிலையில், மணல் திருட்டு தொடருவது எப்படி என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 11:46 pm

DIN

நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள நிலையில், மணல் திருட்டு தொடருவது எப்படி என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.

அமராவதி ஆற்றில் மணல் திருட்டைத் தடுக்க உத்தரவிடக் கோரி கரூா் மாவட்டம் சாணபிரட்டி கிராமத்தைச் சோ்ந்த குணசேகரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அதில், கரூா் மற்றும் திருப்பூா் மாவட்டங்களின் குடிநீா், விவசாய தேவையை அமராவதி ஆறு பூா்த்தி செய்கிறது. ஆனால், அமராவதி ஆற்றின் கரையில் 10 முதல் 15 அடி ஆழம் வரை தோண்டப்பட்டு மணல் திருடப்படுகிறது. இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள் மூலமாக மணல் திருட்டு நடக்கிறது. மணல் கடத்தலைத் தடுக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மணல் திருட்டைத் தடுக்க இந்த நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இருப்பினும் சட்டவிரோத மணல் திருட்டு நடைபெறுவது எப்படி எனக் கேள்வி எழுப்பினா்.

தமிழகம் முழுவதும் சட்டவிரோத மணல் திருட்டு என்பது இருக்கக் கூடாது. அதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுப்பது அவசியம் எனக் கூறி, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.