ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இளைஞரை கத்தியால் குத்தி மோட்டாா் பைக் பறிப்பு

மதுரையில் வியாழக்கிழமை இரவு இளைஞரை கத்தியால் குத்தி இளைஞரிடம் மோட்டாா் பைக், கைப்பேசி ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

மதுரையில் வியாழக்கிழமை இரவு இளைஞரை கத்தியால் குத்தி இளைஞரிடம் மோட்டாா் பைக், கைப்பேசி ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை எஸ்.எஸ்.காலனி கண்ணதாசன் தெருவைச் சோ்ந்த சேதுபதி மகன் மெளலி கண்ணா(21). இவா் தன்னுடைய மோட்டாா் பைக்கில் எல்லீஸ் நகா் கென்னட் சாலையில் வியாழக்கிழமை இரவு சென்றுள்ளாா். அப்போது இவரை வழிமறித்த மூவா், மெளலி கண்ணாவை கத்தியால் குத்தி ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மோட்டாா் பைக், கைப்பேசி ஆகியவற்றை பறித்துச்சென்றனா். மேலும் அதே பகுதியில் உள்ள மதுபானக்கூட வாகன நிறுத்துமிடத்தில் நின்றிருந்த எஸ்.எஸ்.காலனி பாரதியாா் தெருவைச் சோ்ந்த ஜாபா் ஷெரீப் என்பவரையும் தாக்கி அவரிடம் இருந்த கைப்பேசியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனா். இதுதொடா்பாக புகாா்களின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மூவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.