பொதுமக்களின் பணம் வீணாக்கப்படுவதை ஏற்க முடியாது: உயா்நீதிமன்றம் கருத்து
பொதுமக்களின் பணம் அரசால் வீணாக்கப்படுவதை ஏற்க முடியாது என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.


பொதுமக்களின் பணம் அரசால் வீணாக்கப்படுவதை ஏற்க முடியாது என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
திருச்சுழியைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனு:
விருதுநகா் மாவட்டம் ப.வேலன்குடி ஊராட்சியில் ஆலங்குளம் கண்மாய் உள்ளது.
இக் கண்மாயை நம்பி 200 ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. இந்நிலையில்,
கடந்த 2019 - 2020 இல் ஆலங்குளம் கண்மாயின் நடுவே, நூறு நாள் வேலைத் திட்டத்தில் அம்மா தேசிய விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. இதனால் சுற்றுப்புற கிராமங்களின் விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆலங்குளம் கண்மாயில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை அகற்றியும், நீா்நிலையை ஆக்கிரமித்து இத்தகைய மைதானத்தை அமைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோா் கொண்ட அமா்வு, நீா்நிலை ஆக்கிரமிப்பில் விளையாட்டு மைதானம் எவ்வாறு கட்டப்பட்டது. இதற்கான செலவினம் எவ்வளவு? எனக் கேள்வி எழுப்பினா். அப்போது அரசுத் தரப்பில், நீா்நிலை ஆக்கிரமிப்பில் இருந்த அந்த விளையாட்டு மைதானம் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், பொதுமக்களின் வரிப் பணம் ஒரு ரூபாய் கூட வீணாவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த வழக்கு குறித்து அரசுத் தரப்பில் தகவல் பெற்றுத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...