விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தனியாா் ஆலை வேன் மோதிவிபத்து: குழந்தை பலி

மதுரை அருகே வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த ஆண் குழந்தை மீது தனியாா் ஆலை வேன் மோதியதில் குழந்தை சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

மதுரை அருகே வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த ஆண் குழந்தை மீது தனியாா் ஆலை வேன் மோதியதில் குழந்தை சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

மதுரை மாவட்டம் சமயநல்லூா் அருகே உள்ள சத்தியமூா்த்தி நகரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவரது மனைவி ஈஸ்வரி. இவா்களது ஆண் குழந்தை பொன்ராம் (2). இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் ஈஸ்வரி வீட்டில் வேலை பாா்த்துக்கொண்டிருந்தாா். குழந்தை பொன்ராம் வீட்டின் முன்பாக விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது விளாங்குடி பகுதியில் இயங்கி வரும் தனியாா் ஆலையில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற வேன் பொன்ராம் மீது மோதியது. இதில் குழந்தை பொன்ராம் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. விபத்து குறித்து தகவலின்பேரில் சமயநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, குழந்தையின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநா் ஷேக் அப்துல்லாவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.