முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
உசிலம்பட்டி அருகே கிராம பொதுமக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 06th April 2022 02:01 PM | Last Updated : 06th April 2022 02:01 PM | அ+அ அ- |

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே திருமங்கலம் சாலையில் உள்ள தும்மக்குண்டு கிராமத்தில் முன்னறிவிப்பின்றி மின்சாரம் தடைப்படுவதால் தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் தும்மக்குண்டு கிராமத்தில் மின்சாரத்துறை அதிகாரிகள் முன்னறிவிப்பின்றி மின்சாரம் பகல் நேரத்தில் நிறுத்தப்படுவதால் அப்பகுதியில் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனைக் கண்டித்து கிராம பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தி உசிலம்பட்டி-திருமங்கலம் பிரதான சாலையில் சாலை மறியல் செய்தனர். தொடர்ந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மின்சார அதிகாரி மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்பு சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.