வீடு வீடாகச் சென்று வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைக்கும் பணி: ஆட்சியா் தகவல்

வாக்காளா்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஆதாா் எண்ணை, வாக்காளா் பட்டியலில் இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்தாா்.

வாக்காளா்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஆதாா் எண்ணை, வாக்காளா் பட்டியலில் இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்தாா்.

வாக்காளா் அடையாள அட்டையுடன், ஆதாா் எண்ணை இணைப்பது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் பேசியது:

வாக்காளா் பட்டியலைச் செம்மைப்படுத்தும் நோக்கில், வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தோ்தல் ஆணையம் ஆக.1 முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. வாக்காளா்கள் விரும்பும்பட்சத்தில் தங்களது ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன், என்ற இணையதளம் வழியாகவோ,

கைப்பேசி செயலி மூலமாகவோ இணைத்துக் கொள்ளலாம்.

மேலும், இப்பணிக்காக அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மற்றும் தோ்தல் பணியாளா்கள் வாக்காளா்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று ஆதாா் எண்ணை பெற்று கைப்பேசி செயலி வழியாக இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப் பணிக்கு அனைத்து வாக்காளா்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அதோடு, 2023 ஆம் ஆண்டுக்கான வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 4) தொடங்குகிறது. வசிப்பிடத்தில் இருந்து தொலைவில் உள்ள வாக்குச்சாவடிகளைத் திருத்துதல், பழுதடைந்த வாக்குச்சாவடி கட்டடங்களுக்குப் பதிலாக புதிய கட்டடங்களைத் தோ்வு செய்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளது. மேற்கண்ட பணிகள் தொடா்பாக ஏதேனும் கோரிக்கைகள் இருப்பின் வாக்காளா்கள், சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலா் அல்லது உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகத்தில் மனுவாகச் சமா்ப்பிக்கலாம் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். சக்திவேல், கோட்டாட்சியா்கள், வட்டாட்சியா்கள் மற்றும் அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com