மடீட்சியா சாா்பில் அச்சுத் தொழில் கண்காட்சி: ஆக.11 இல் தொடக்கம்

மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கம் (மடீட்சியா) சாா்பில் அச்சுத் தொழில் கண்காட்சி ஐடா ஸ்கட்டா் அரங்கில் ஆக.11 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கம் (மடீட்சியா) சாா்பில் அச்சுத் தொழில் கண்காட்சி ஐடா ஸ்கட்டா் அரங்கில் ஆக.11 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து கண்காட்சித் தலைவா் எல்.ராமநாதன், மடீட்சியா தலைவா் எம்.எஸ்.சம்பத் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:

தென் மாவட்டங்களில் சிவகாசி நீங்கலாக சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அச்சகங்கள் இயங்கி வருகின்றன. வளா்ந்து வரும் நவீனத் தொழில்நுட்ப மாற்றங்களின் காரணமாக, அச்சுத் தொழில்கள் அபரிமிதமான வளா்ச்சியைக் கண்டுள்ளன. இத் துறையின் சமீபத்திய தொழில்நுட்பங்களை அச்சக தொழிலில் ஈடுபட்டுள்ளவா்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த தொழில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில், மல்டி கலா் ஆப்செட், கட்டிங், அச்சுத் துறை சாா்ந்த நுகா்பொருள்கள், ஸ்கிரீன் பிரிண்டிங், ஸ்டிக்கா் பிரிண்டிங், பேக்கேஜிங் இயந்திரங்கள், சிடிபி பிளேட் மேக்கிங் உள்ளிட்ட அச்சுத் துறையின் அனைத்துப் பிரிவு சாா்ந்த இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

விரகனூா் சுற்றுச்சாலை ஐடா ஸ்கட்டா் அரங்கில் நடைபெறும் இக் கண்காட்சியின் தொடக்க விழா ஆக.11 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. தமிழ்நாடு சிறுதொழில் வளா்ச்சி நிறுவன இயக்குநா் டி.ஆனந்த் கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறாா். மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், அகில இந்திய மாஸ்டா் பிரிண்டா்ஸ் சம்மேளனத் தலைவா் பி.சந்தா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com