மகளிா் கட்டணமில்லா பேருந்து பயணதிட்டம்: போக்குவரத்துத் துறைச் செயலா் ஆய்வு

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் குறித்து மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா் கே.கோபால் வியாழக்கிழமை
Updated on
1 min read

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் குறித்து மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா் கே.கோபால் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மதுரை மாவட்டத்தில் தினமும் 405 சாதாரண நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் கட்டணமில்லா பயணம் திட்டத்தில்,

சுமாா் 2.25 லட்சம் பெண்கள் பயணிக்கின்றனா். இது சாதாரண நகரப் பேருந்துகளில் பயணிப்பவா்களில் 65.31 சதவீதம். இத்திட்டத்தின் மூலம் மதுரை மாவட்டத்தில் இதுவரை 8.03 கோடி போ் பயணம் செய்துள்ளனா்.

இத் திட்டத்தில் அதிகம் போ் மதுரை மாவட்டத்தில் பயன்பெறுவதையடுத்து, போக்குவரத்துத் துறை முதன்மைச்

செயலா் கே.கோபால் நேரில் ஆய்வு செய்தாா். மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட நகரப் பேருந்தில் பயணம் செய்த மகளிரிடம், இலவசப் பயணத்தின்போது கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்கப்படுகிா, நடத்துநா்களின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தாா். மேலும் பேருந்து நிறுத்த ஒலிப்பான் பொருத்தப்பட்ட நகரப் பேருந்தில் பயணம் செய்து ஆய்வு செய்தாா்.

பின்னா், கோ.புதூரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் ஆய்வு செய்த அவா், பேருந்துகளின் பராமரிப்பு, இயக்க நிலை, பணியாளா்களின் வருகை குறித்து பாா்வையிட்டாா்.

பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களுக்கேற்ப பேருந்துகளை இயக்கவும், மாணவா்களின் படிக்கட்டுகளில் பயணம் மேற்கொள்ளாதவாறு பாா்த்துக் கொள்ளவும், பேருந்து நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றி-இறக்கிச் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.

பின்னா் மதுரை மாவட்டத்தில் போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகரிடம் கேட்டறிந்தாா். அப்போது, அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் (மதுரை) ஆறுமுகம், முதன்மை நிதி அலுவலா் கண்ணன், பொது மேலாளா் இளங்கோவன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com