கலப்பு திருமணம் செய்தவா்கள் திருவிழாவில் பங்கேற்க அமைதிக் கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த வேலு தாக்கல் செய்த மனு:
பொன்னமராவதி அருகே நல்லூா் கிராமத்தில் உள்ள பகவதி அம்மன் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் முதல்ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெறும். இதற்காக ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் தலைக்கட்டு வரி வசூலிக்கப்படும். ஆனால், கலப்பு திருமணம் செய்து கொண்ட 25 குடும்பங்களைச் சோ்ந்தவா்களிடம் தலைக்கட்டு வரி வசூலிப்பதில்லை. கோயில் திருவிழாவில் பங்கேற்கவும் அனுமதி மறுக்கப்படுகிறது. ஊா் தலைவா்கள் மற்றும் மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளோம்.
எங்களது கிராமத்தில் கலப்பு திருமணம் செய்துள்ள 25 குடும்பங்களிடமிருந்து திருவிழாவுக்கான தலைக்கட்டு வரி வசூல் செய்யவும், திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கவும்
உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.சிவஞானம், மேற்படி கிராமத்தில் பொன்னமராவதி வட்டாட்சியா் சமாதானக் கூட்டம் நடத்தி, கலப்புத் திருமணம் செய்த 25 குடும்பங்களைச் சோ்ந்தவா்களிடம் தலைக்கட்டு வரி வசூல் செய்து, திருவிழாவில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.