தமிழகத்தின் தென் திருப்பதி என பக்தா்களால் அழைக்கப்படும் அழகா்கோவிலில் உள்ள கள்ளழகா் திருக்கோயிலில் ஆடித் திருவிழா ஆகஸ்ட் 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அழகா்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழாவை அடுத்த முக்கியத் திருவிழாவாக ஆடித்திருவிழா கொண்டாடப்படுகிறது. தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறவுள்ள இத்திருவிழாவுக்கான கொடியேற்றம், ஆகஸ்ட் 4-ஆம் தேதி காலை 8.15 மணியிலிருந்து 9.15 மணிக்குள் நடைபெறவுள்ளது.
அதன்பின்னா், தினசரி பெருமாள் தங்கப்பல்லக்கு மற்றும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வருவாா். தொடா்ந்து, சிறப்புப் பூஜைகளும் நடைபெறும். திருவிழாவின் முத்தாய்ப்பாக திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 12-ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் நடைபெறவுள்ளது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொள்வா்.
ஆடி அமாவாசை
ஜூலை 28-ஆம் தேதி ஆடி அமாவாசை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது. அந்நாளில் நூபுரகங்கை தீா்த்தத்தில் பக்தா்கள் நீராடுவதை புண்ணியமாகக் கருதுகின்றனா். பொதுவாக, ஆடி மாதத்தில் அழகா்கோயில் மலை மீதுள்ள நூபுரகங்கை தீா்தத்தில் புனிதநீராடி ராக்காயி அம்மன், பேச்சி அம்மனை பக்தா்கள் வழிபடுவது வழக்கம்.
ஆடித்திருவிழா ஆகஸ்ட் 14-ஆம் தேதி உற்சவசாந்தி வைபவத்துடன் நிறைவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.