மேலூர் அருகே மொபைல் வழியாக மின்னல் தாக்கி 19 வயது இளைஞர் மரணம்

கேசம்பட்டியில் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது மொபைல் வழியாக மின்னல் தாக்கியதில் 19 வயது இளைஞர் பலியானார்.
ராஜா.
ராஜா.

கேசம்பட்டியில் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது மொபைல் வழியாக மின்னல் தாக்கியதில் 19 வயது இளைஞர் பலியானார்.

மதுரை மாவட்டம், கேசம்பட்டி, கம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் மழை பெய்தது. இந்நிலையில் கேசம்பட்டி கிழக்கிகுளம் பகுதியில் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அறுவடை செய்த நெல்லை பம்பக்காளை, வெள்ளையம்மா ஆகியோர் தங்களது மகன் ராஜாவுடன் இணைந்து காய வைத்திருந்தனர். மழை செய்யத் தொடங்கியவுடன் தனது பெற்றோருடன் இணைந்து நெல்லை நனையாமல் தடுக்க அதனை திரட்டிக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென இடியும் மின்னலும் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. 

இந்த நேரத்தில் சற்று தூரத்தில் கிடந்த ஒரு கல்லை தூக்கி வர ராஜா சென்றார். அப்போது மின்னல் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. மின்னல் தாக்கியவுடன் 108 ஆம்புலன்ஸ் உதவிக்கு அழைக்கப்பட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் இடையிலேயே ராஜா உயிர் இழந்து விட்டதாக கூறப்படுகிறது. சம்ப நிகழ்ந்தபோது ராஜாவின் இடுப்பில் இருந்த மொபைல் வெடித்துச் சிதறியதாகவும் சொல்லப்படுகிறது. உடம்பில் பெரிய காயங்கள் எதுவும் இல்லாததால் மொபைல் வழியாகவே மின்னல் தாக்கியதில் மின்சாரம் பாய்ந்து இருக்க வேண்டும் என நம்பப்படுகிறது.

கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்த குடும்பத்திற்கு ராஜாவின் மரணம் பெரிய இழப்பாகும். இளைஞர்கள் பலர் தற்போது மொபைல் நிறுவனங்கள் தரும் எல்லையற்ற இணைய வசதி சலுகைகளால் இணையத்தை பயன்படுத்தும் நேரங்கள் தவிர பிற சமயங்களில் மொபைலில் இணையத்தொடர்பை துண்டிக்காமல், அனைத்து நேரங்களிலும செயல்பாட்டில் வைத்துயுள்ளதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது இதுபோன்ற மழை காலங்களில் பெரிய ஆபத்தை உண்டாக்கும் என்பதற்கு நடந்த சம்பவம் சான்றாக உள்ளது. 

இடி மின்னலுடன் மழை பெய்யும் பொழுது திறந்தவெளியில் இருப்பதையும், மரத்து அடியில் நிற்பதையும், கண்மாய் குளங்களில் குளிப்பதையும், வீட்டு மின்சாரத்தை உபயோகப்பதையும், மொபைலில் இணைய தொடர்பையும் முற்றிலும் தவிர்ப்பது அவசியமாகும். இதுபற்றி அனைவரும் தங்கள் குடும்பங்களிலும் நட்பு வட்டங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டுகிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com