மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாயிலில் செயல்பட்டு வந்த 50-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றம்
By DIN | Published On : 18th June 2022 12:38 PM | Last Updated : 18th June 2022 12:38 PM | அ+அ அ- |

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாயிலில் செயல்பட்டு வந்த 50-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டது.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் வீர வசந்தராயர் மண்டபம் சேதமடைந்தது. கோயிலுக்குள் செல்ல தடை செய்யப்படக் கூடாது நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது.
இதையும் படிக்க: தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் மறுப்பு
அதனைத் தொடர்ந்து புது மண்டபம் பகுதியில் செயல்பட்டு வந்த கடைகள் மொத்தமாக குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றப்பட்டது.
தற்பொழுது கிழக்கு கோபுரம் அம்மன் சன்னதி பகுதியில் செயல்பட்டு வந்த 50-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் கடையில் உள்ள பொருட்களை கோயில் நிர்வாகத்தினர் இன்று காலை முதல் அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த பொருள்கள் கோயிலின் சிலைகளை மறைப்பதாகவும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G