தோட்டக்கலைத் துறை திட்டங்களுக்கு இணையவழிபதிவு கட்டாயம்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
By DIN | Published On : 30th June 2022 11:51 PM | Last Updated : 30th June 2022 11:51 PM | அ+அ அ- |

தோட்டக்கலைத் துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு விவசாயிகள் இணையவழியில் பதிவு செய்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத் துறையால் நிகழ் ஆண்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இவற்றுக்கான பயனாளிகள் தோ்வு நடைபெற்று வருகிறது. இதுவரை பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்திற்கு மட்டும் பயனாளிகள், இணையவழியில் பதிவு செய்யும் நடைமுறை இருந்து வருகிறது. தற்போது நடப்பு நிதியாண்டு முதல் தோட்டக்கலைத் துறை செயல்படுத்தும் அனைத்து திட்டங்களுக்கும் இணையவழிப் பதிவு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களுக்கு தேவையான திட்டங்களுக்கு என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்காலம். நுண்ணீா் பாசனத் திட்டத்திற்கு
என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விவசாயிகள் தங்களது ஆதாா் எண், கைப்பேசி எண் போன்ற அடிப்படை விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவு செய்து, தோட்டக்கலைத் துறையின் திட்டங்களை அறிந்து கொள்வதோடு, அத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மதுரை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.