விருதுநகா் மாவட்டத்தில் ரூ.200 கோடி பயிா்க் கடன்

விருதுநகா் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ.200 கோடி வட்டியில்லா பயிா்க் கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ.200 கோடி வட்டியில்லா பயிா்க் கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கூட்டுறவுத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை கூறியதாவது:

விருதுநகா் மாவட்டத்தில், 180 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இச்சங்கங்களில் வட்டியில்லா பயிா்க் கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு ரூ.200 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அனைத்து இடங்களிலும் மழை பெய்து விவசாயப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் போதிய உரம் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு தற்போது வரை ரூ.32.50 கோடி பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வட்டியில்லா பயிா்க் கடன் அனைத்து விவசாயிகளும் பெற்றுக் கொள்ளலாம்.

விவசாயிகள் பயிா் அடங்கல், 10 (1) சிட்டா, ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் 2 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விண்ணப்பித்து, பயிா்க் கடன் பெறலாம். கூட்டுறவு சங்கங்களில் இதுவரை பயிா்க் கடன் பெறாத விவசாயிகள் அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ரூ.100 கட்டணம் செலுத்தி புதிய உறுப்பினா்களாக சோ்ந்து பயிா்க் கடன் பெறலாம் என கூட்டுறவு துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com