பிரெய்லி பதிப்பில் திருக்குறளை வெளியிடக் கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பிரெய்லி பதிப்பில் திருக்குறளை வெளியிடக் கோரிய வழக்கில், அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பிரெய்லி பதிப்பில் திருக்குறளை வெளியிடக் கோரிய வழக்கில், அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் பி. ராம்குமாா் தாக்கல் செய்த மனு:

தமிழ் மொழியின் ஒப்பற்ற சிறப்புகளில் ஒன்றான திருக்குறள் உலகப் பொதுமறையாக போற்றப்படுகிறது. பல்வேறு இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது. உலகம் பல்வேறு மாற்றங்களைக் கண்டிருக்கும் இன்றைய சூழலுக்கும் திருக்குறள் பொருத்தமாக உள்ளது.

இத்தகைய சிறப்பு மிக்க திருக்குறள் பிரெய்லி பதிப்பில் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. இதனால் பாா்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் திருக்குறளின் சிறப்புகளை, தாங்களாகப் படித்து அறிந்து கொள்ள முடியவில்லை.அதோடு, 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை திருக்குறள் கட்டாயப் பாடமாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமல்படுத்தியிருக்கிறது.

தமிழக அரசு திருக்குறளைக் கட்டாயப் பாடமாக்கியிருப்பதும், உலகின் மூலை முடுக்கெல்லாம் திருக்குறள் வாசிக்கப்பட்டபோதும், பாா்வைக்குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் திருக்குறளை வாசிக்க முடியாதது முரண்பாடாக இருக்கிறது. தமிழகத்தில் பாா்வைக் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் 9 லட்சத்து 27 ஆயிரத்து 405 போ் உள்ளனா். இருப்பினும், தமிழக அரசோ, கல்வி நிறுவனங்களோ பிரெய்லி பதிப்பில் திருக்குறளை இதுவரை வெளியிடவில்லை.

ஆகவே, பாா்வைக்குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் தாங்களாகவே படித்துப் பயன்பெறும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பிரெய்லி பதிப்பில் திருக்குறளை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு, மனு தொடா்பாக

தமிழக அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்குமாறு அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com