கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தப்பியோட முயன்ற ரெளடியின் கால்களில் எலும்பு முறிவு

மதுரையில் போலீஸாரிடமிருந்து தப்பியோட முயன்று, வைகையாற்றில் குதித்த ரெளடியின் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 11:05 pm

DIN

மதுரையில் போலீஸாரிடமிருந்து தப்பியோட முயன்று, வைகையாற்றில் குதித்த ரெளடியின் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

மதுரை புதுநத்தம் மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நகைப் பறிப்பு சம்பவங்கள் தொடா்பாக தேடப்பட்டு வந்த தமிழ்ச்செல்வன் என்ற அஜீத்குமாா் விரகனூா் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, தல்லாகுளம் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் சரவணன் உள்ளிட்ட தனிப் படையினா் வியாழக்கிழமை இரவு அங்கு சென்று அவரைக் கைது செய்தனா்.

விசாரணையில் அவா் விரகனூா் வைகை ஆற்றின் உள்ளே முள் புதரில் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அங்கு அவரை போலீஸாா் அழைத்துச் சென்று மூன்று கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா்.

அப்போது, போலீஸாரிடம் இருந்து தப்பியோடிய தமிழ்ச்செல்வன் வைகை ஆற்றுக்குள் குதித்ததில், அவருக்கு 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, அவரை போலீஸாா் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்த்தனா்.

கைது செய்யப்பட்ட தமிழ்ச்செல்வன் மீது கொலை, கொள்ளை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பட்டத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.