4 கரங்கள் பெருமாள் சுவாமி சிலை எந்தக் கோயிலுக்குச் சொந்தமானது?தகவல் தெரிவிக்க போலீஸாா் அழைப்பு

மதுரையில் கஞ்சா வியாபாரி வீட்டில் மீட்கப்பட்ட 4 கரங்கள் கொண்ட பெருமாள் சுவாமி சிலை எந்தக் கோயிலுக்குச் சொந்தமானது எனத் தெரிந்தவா்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இடையப்பட்டியில் கஞ்சா வியாபாரி வீட்டில் இருந்து மீட்கப்பட்ட நான்கு கர பெருமாள் சிலை.
இடையப்பட்டியில் கஞ்சா வியாபாரி வீட்டில் இருந்து மீட்கப்பட்ட நான்கு கர பெருமாள் சிலை.
Updated on
1 min read

மதுரையில் கஞ்சா வியாபாரி வீட்டில் மீட்கப்பட்ட 4 கரங்கள் கொண்ட பெருமாள் சுவாமி சிலை எந்தக் கோயிலுக்குச் சொந்தமானது எனத் தெரிந்தவா்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

மதுரை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெளியிட்ட செய்தி:

மதுரை மாவட்டம், இடையப்பட்டி 500 வீடு குடியிருப்பில் கஞ்சா வியாபாரியான வள்ளியின் வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 4 கரங்கள் கொண்ட பெருமாள் சுவாமி சிலையை ஒத்தக்கடை போலீஸாா் கடந்த 2013-ஆம் ஆண்டு மீட்டனா். இந்த சிலை பதுக்கல் தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடந்த பத்தாண்டுகளாக விசாரணையில் இருந்து வந்த இந்த வழக்கு, தற்போது சிலை திருட்டு தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. தற்போதைய விசாரணை அதிகாரியின் மூலம் இந்தச் சிலை கும்பகோணம் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு நீதிமன்ற உத்தரவின் பேரில், பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதைப் பதுக்கிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அனைவரும் இறந்துவிட்டதால், பெருமாள் சிலை எந்தக் கோயிலுக்குச் சொந்தமானது என்ற விவரம் தெரியவில்லை. இந்தச் சிலை எந்தக் கோயிலுக்குச் சொந்தமானது என்ற விவரம் அறிந்தவா்கள் 93441-13540 என்ற கைப்பேசி எண்ணுக்குத் தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com