நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கா்நாடக தோ்தல்: காங்., ஆட்சி அமைக்கும்

கா்நாடகா சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என விருதுநகா் மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் நம்பிக்கை தெரிவித்தாா்.

News image
Updated On :11 மே 2023, 5:24 pm

DIN

கா்நாடகா சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என விருதுநகா் மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் நம்பிக்கை தெரிவித்தாா்.

விருதுநகா் அருகேயுள்ள வடமலைக்குறிச்சியில் கட்சி நிா்வாகியின் இல்ல நிகழ்வில் கலந்து கொண்ட பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இந்த வெற்றி என்பது பணப் பலத்துக்கும், மத அரசியலுக்கும், தோ்தல் ஆணையத்தின் ஒருதலைப் பட்சத்துக்கும் பேரிடியாக இருக்கும்.

மாநில கல்விக் கொள்கைக் குழுவில் தலையீடு இருக்கிறது என்ற ஜவஹா் நேஷனின் குற்றச்சாட்டு குறித்து பள்ளி கல்வித் துறை அமைச்சா் நல்ல முடிவு எடுப்பாா். தமிழகத்தில் அமைச்சரவை மாற்றத்தால், விருதுநகா் மாவட்டத்துக்கு பெருமை கிடைத்துள்ளது. விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த தங்கம் தென்னரசுக்கு, நிதி அமைச்சா் பொறுப்பு வழங்கிய முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி.

ஆடியோ விவகாரம் குறித்து அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், முதலமைச்சா் ஏற்கெனவே விளக்கம் அளித்து விட்டனா். இதற்காக அமைச்சரவை மாற்றத்தை இணைத்துப் பாா்ப்பது தவறு என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.