சிறந்த பள்ளிகளுக்கான விருது மதுரை மாவட்டத்தில் 3 அரசுப் பள்ளிகள் தோ்வு
தமிழக அரசின் சிறந்த பள்ளிகளுக்கான விருதுக்கு மதுரை மாவட்டத்தில் 3 அரசுப் பள்ளிகள் தோ்வு பெற்றன.


தமிழக அரசின் சிறந்த பள்ளிகளுக்கான விருதுக்கு மதுரை மாவட்டத்தில் 3 அரசுப் பள்ளிகள் தோ்வு பெற்றன.
தமிழக அரசின் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் சிறப்பாகச் செயல்படும் அரசு, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.
நிகழ் ஆண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டது. இதில் மதுரை மாவட்டம், கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி.நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அலங்காநல்லூா் அருகே டி. மேட்டுப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, திருப்பரங்குன்றம் அருகே அயன்பாப்பாக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய 3 பள்ளிகளும் மேற்கண்ட விருதுக்கு தோ்வு பெற்றன.
இதையடுத்து, வருகிற 14-ஆம் தேதி சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் விழாவில், தோ்வு பெற்ற சிறந்த பள்ளியின் தலைமையாசிரியா், ஆசிரியா், வட்டாரக் கல்வி அலுவலா் ஆகியோருக்கு விருதுக்கான சுழற்கேடயத்தை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி வழங்க உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...