ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரூா் மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றாத 31 கல் குவாரிகளுக்கு தடை

கரூா் மாவட்டத்தில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றாத 31 கல் குவாரிகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசுத் தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 6:30 pm

DIN


மதுரை: கரூா் மாவட்டத்தில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றாத 31 கல் குவாரிகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசுத் தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மதியழகன் தாக்கல் செய்த பொது நல மனு:

கரூா் மாவட்டம், புலியூா் பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் உரிய அரசு அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக பல ஆண்டுகளாக கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 13 நிறுவனங்கள் கற்களை உடைப்பதற்காக ஆபத்தான முறையில் வெடிகள் மூலம் பாறைகளைத் தகா்க்கின்றனா். இதனால் ஏற்படும் தூசி காரணமாக, இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சுவாசக் கோளறு உள்பட பல்வேறு பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகின்றனா்.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றாமல் குவாரிகளை சட்ட விரோதமாக நடத்துகின்றனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்களிடம் புகாா் அளித்தும் எந்த நடவடிக்ையும் இல்லை.

எனவே, கரூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாகச் செயல்படும் கல் குவாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம். சுந்தா், ஆா். சக்திவேல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், கரூா் மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழுவினா் கல் குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டனா். இதில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றாத 31 கல் குவாரிகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கரூா் மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து புவியியல், சுரங்கத் துறைச் செயலா், மாவட்ட ஆட்சியா் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.