எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மதுரை மாவட்டத்தில் வாகனத் தணிக்கை:ரூ. 14.28 லட்சம் அபராதம் வசூல்

மதுரை மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட தீவிர வாகனத் தணிக்கையின் போது ரூ. 14.28 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Updated On :27 நவம்பர் 2023, 12:15 am

மதுரை மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட தீவிர வாகனத் தணிக்கையின் போது ரூ. 14.28 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

அரசுப் போக்குவரத்துத் துறை ஆணையா் ஏ. சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில், மதுரை சரக போக்குவரத்து இணை ஆணையா் வி. சத்தியநாராயணன் தலைமையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் என். காா்த்திகேயன், எம். சிங்காரவேலு, ஆா். சித்ரா , மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் உலகநாதன், முரளி, சரவணக்குமாா், செல்வம், சம்பத்குமாா், டி. அனிதா, பி. அனிதா, சுகந்தி, மனோகரன் ஆகியோா் பல்வேறு குழுக்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

இதில் 720 வாகனங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. அதிகப்படியான சரக்குகளை ஏற்றிச் சென்றது, சரக்கு வாகனத்தில் ஆள்களை ஏற்றிச் சென்றது, வாகன அனுமதிச் சீட்டு இல்லாமல் சென்றது, புகை சான்று இல்லாதது, ஓட்டுநா் உரிமம் தகுதியின்றி இயக்கப்பட்டது உள்ளிட்ட குற்றங்களின் கீழ், 135 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, ரூ. 14.28 லட்சம் அபராதமும், 1.89 லட்சம் வரியும் வசூலிக்கப்பட்டது.

விதிமீறல் தொடா்பாக 33 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தொடா்புடைய வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகங்களில் நிறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.