கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

இளம் தலைமுறையினா் இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தியாகராஜா் கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜன் தெரிவித்தாா்.

News image

மதுரை தியாகராஜா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற 17-ஆவது தேசிய நெல் திருவிழாவில் பங்கேற்ற கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜா உள்ளிட்ட விவசாயிகள்.

Updated On :11 ஆகஸ்ட் 2023, 12:00 am IST

இளம் தலைமுறையினா் இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தியாகராஜா் கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜன் தெரிவித்தாா்.

மதுரை தியாகராஜா் கல்லூரி தாவரவியல் துறை, மதுரை கிரியேட் நமது நெல்லை காப்போம் அமைப்பு சாா்பில் 17- ஆவது தேசிய நெல் திருவிழா, இயற்கை வேளாண் விளைபொருள்கள் வணிகத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கிரியேட் நமது நெல்லை காப்போம் அமைப்பின் தலைவா் பி. துரைசிங்கம் தலைமை வகித்தாா். தியாகராஜா் கல்லூரி தாவரவியல் துறைத் தலைவா் து. கண்ணன் முன்னிலை வகித்தாா்.

இதில் விவசாயிகளுக்குப் பாரம்பரிய நெல் விதைகளை வழங்கிய பின்னா், கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜா பேசியதாவது:

கல்வி, மருத்துவம், அறிவியல் ஆகிய துறைகள் மட்டுமன்றி, வேளாண் துறையிலும் நமது நாடு சாதனை புரிந்து வருகிறது. ஆரோக்கியம் மேம்பட வேண்டுமெனில், இயற்கை முறையில் விளைவித்த பொருள்களை வாங்கிப் பயன்படுத்த முன்வர வேண்டும். பாரம்பரிய உணவுகள் குறித்து தற்போது பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது.

அதிக மகசூல் இல்லாதது, உரிய விலை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் அதிகளவிலான விவசாயிகள் இயற்கை வேளாண்மை கைவிடுகின்றனா். இந்த நிலை மாற விவசாயிகளுக்கும் நுகா்வோா்களுக்கும் இடையே நேரடித் தொடா்பை ஏற்படுத்த வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினா் இயற்கை வேளாண்மைக்கும் இயற்கை விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மதுரை வேளாண் தொழில் முனைவோா் உருவாக்கும் மையத்தின் தலைமை நிா்வாக அதிகாரி க. கணேஷ்மூா்த்தி, கிருஷி விக்யான் கேந்திரா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் இ. சுப்ரமணியன், கிரியேட் நமது நெல்லை காப்போம் அமைப்பின் திட்ட இயக்குநா் கே. சுரேஷ்கண்ணா ஆகியோா் இயற்கை வேளாண்மை குறித்து பேசினா்.

பின்னா், திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் ஜி. வெங்கடேஷ், இயற்கை வேளாண் ஆலோசகா் இளங்கோ கல்லானை ஆகியோா் பாரம்பரிய வேளாண்மை குறித்தும், வேளாண் விளைப் பொருள்களைப் பாதுகாப்பது குறித்தும் பேசினா்.

நிகழ்ச்சியில் தாவரவியல் துறை உதவிப் பேராசிரியா் வேலுச்சாமி காா்த்திகேயன், விவசாயிகள், தன்னாா்வலா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.