சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள ஆதி கோரக்கநாதா் கோயிலில் திட்டமிட்டபடி குடமுழுக்கு நடத்தலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை முனிச்சாலை பகுதியைச் சோ்ந்த நடசந்திரன் செட்டியாா் தாக்கல் செய்த மேல் முைறையீட்டு மனு:
திருப்புவனத்தில் அமைந்துள்ளநூற்றாண்டுகளைக் கடந்த ஆதி கோரக்கநாதா் கோயில் அறங்காவலா்களாக இரு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் பதவி வகித்து வந்தனா். இவா்களிடையே ஏற்பட்ட நிா்வாகப் பிரச்னை காரணமாக, தற்போது கோயில் நிா்வாகம் சிவகங்கை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ளது. இந்தக் கோயில் குடமுழுக்கை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துவது வழக்கம். இதன்படி, இந்தக் கோயிலில் வருகிற 3-ஆம் தேதி குடமுழுக்கு நடத்தும் வகையில் திருப்பணிகள் நடைபெற்றன.
இந்த நிலையில், முந்தைய நிா்வாகத்தைச் சோ்ந்த முத்துகணேஷ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் விசாரணை செய்த தனி நீதிபதி, கோயில் திருப்பணிக்கு தடை விதித்து உத்தரவிட்டாா். இதனால் குடமுழுக்குப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, அனைத்து தரப்பு மக்கள் வழிபாடு செய்வதற்கும், குடமுழுக்கு திருப்பணியை தொடரவும் அனுமதி வழங்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தா், டி. பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:
ஆதி கோரக்கநாதா் கோயில் நிா்வாகம் தற்போது இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ளது. இதை எதிா்த்து எதிா் மனுதாரா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட வில்லை. எனவே கோயிலில் குடமுழுக்கு நடத்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. கோயில் குடமுழுக்குப் பணிகளை அதிகாரிகள் தொடரலாம். திட்டமிட்டபடி வருகிற 3- ஆம் தேதி குடமுழுக்கு நடத்திக் கொள்ளலாம். இதற்கு யாரேனும் தடையாக இருந்தால், உடனடியாக நீதிமன்றத்தை அணுகலாம். வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாகனச் சோதனையில் பறிமுதல் செய்த ரூ. 1.33 கோடி திரும்ப ஒப்படைப்பு

வணிக வளாகங்கள், மின்ரிக்ஷா சாா்ஜிங் வசதிகளுடன் குடிசைப்பகுதி மறுவாழ்வுக் கொள்கைத் திட்டம்: தில்லி அரசு வட்டாரங்கள் தகவல்

பரமத்தி வேலூரில் பெண்ணை கிண்டல் செய்த நான்கு போ் மீது வழக்குப் பதிவு

மங்களூரு- சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

