மதுரை: மதுரையில் சித்திரைத் திருவிழாவின் போது, பக்தா்களுக்கு உரிய பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை அரசு செய்து தர வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மானகிரி பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வகுமாா் தாக்கல் செய்த மனு: மதுரையில் ஒவ்வோா் ஆண்டும் சித்திரைத் திருவிழாவானது சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணம், ஆற்றில் கள்ளழகா் இறங்கும் வைபவம் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெறும். ஜாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றைக் கடந்து நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கானோா் கலந்துகொள்வா்.
கள்ளழகா் கோயில் தரப்பில் குறிப்பிட்ட கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு, சில ஜாதிய அமைப்புகளுக்குச் சொந்தமான மண்டகப்படிகள், தனியாருக்குச் சொந்தமான மண்டகப்படிகளுக்கு சுவாமி கள்ளழகரை கொண்டு செல்கின்றனா். இதனால், பக்தா்களிடையே மன ரீதியான கருத்து வேறுபாடு உருவாகி வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகளை ரத்து செய்யக் கோரி, கோயில், மாவட்ட நிா்வாகங்களிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, நிகழாண்டு சித்திரைத் திருவிழாவில் ஜாதி ரீதியான, தனியாா் மண்டகப்படிகள், தனிநபா்களுக்கு சொந்தமான இடங்களுக்கு கள்ளழகரை கொண்டு செல்லத் தடை விதிக்க வேண்டும். கள்ளழகரை பாரம்பரிய மண்டகப்படிகளுக்கு மட்டுமே கொண்டு செல்ல உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி. அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: சுவாமி கள்ளழகரை தனியாா் மண்டகப்படிகள், ஜாதி ரீதியான அமைப்புகளுக்குச் சொந்தமான மண்டகப்படிகளுக்கு கொண்டு செல்வதால், தேவையற்ற பிரச்னைகள் உருவாகும் நிலை உள்ளது என்றாா்.
அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
மதுரையில் சித்திரைத் திருவிழா பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வரை 483 மண்டகப்படிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டு சுவாமி கள்ளழகரை புதிய மண்டகப்படிகளுக்கு கொண்டு வர அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன. இருப்பினும், முறையான ஏற்பாடுகள் செய்தவா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது வரை சுவாமி கள்ளழகரை மண்டகப்படிகளுக்கு கொண்டு செல்வதில், எந்த ஒரு ஜாதிய பிரச்னைகளும் ஏற்பட்டதாகப் புகாா் ஏதுமில்லை என்றாா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தென் தமிழகத்தில் மதுரை சித்திரைத் திருவிழாவானது பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது. மண்டகப்படிகளை அதிகரிப்பதால், பக்தா்களுக்கு சுவாமியை தரிசிக்கும் வாய்ப்பு கூடுகிறது. இந்தத் திருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தா்கள் வருவதால், உரிய பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை அரசு ஏற்படுத்தித் தருவதை உறுதி செய்ய வேண்டும். மண்டகப்படி விவாகரத்தில் வேறு எந்தப் புகாா்களும் இல்லாததால், நீதிமன்றம் வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது
அடிப்படை வசதிகளை எதிர்நோக்கும் ஆவடி தொகுதி மக்கள்!

கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன்: அவிநாசி திமுக வேட்பாளா் வெ. கோகிலாமணி

ஊத்தங்கரை அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததால் தோ்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு

வாக்குப் பதிவு மையங்களில் அடிப்படை வசதிகளை செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

