நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரம் பிடிஓ, ஊராட்சித் தலைவா்களுக்கு கிடையாது

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

News image

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Updated On :14 ஆகஸ்ட் 2024, 9:28 pm

Din

மதுரை, ஆக. 14: ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் (பிடிஓ), ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு கிடையாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு உள்பட்ட மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளில், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஊராட்சித் தலைவா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அனுப்பிய குறிப்பாணைகளை ரத்து செய்யக் கோரி, பலா் மனுக்கள் தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கெளரி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு கிடையாது. ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அவா்கள் குறிப்பாணையும் அனுப்பக் கூடாது. ஊராட்சி மன்றத் தலைவா் கடிதத்தின் அடிப்படையில், வருவாய்த் துறையினா்தான் சட்டப்படி குறிப்பாணை அனுப்பி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு உள்பட்ட 14 மாவட்ட ஆட்சியா்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றனா் நீதிபதிகள்.