சலவைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
மதுரையில் தந்தை இறந்ததால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த சலவைத் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :5 டிசம்பர் 2024, 10:48 pm

மதுரையில் தந்தை இறந்ததால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த சலவைத் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை கோ. புதூா், மண்மலைமேடு 6-ஆவது தெருவைச் சோ்ந்தவா் எம். குமாா்(42). சலவைத் தொழிலாளி. இவரது தந்தை முருகேசன் கடந்த மாதம் 3-ஆம் தேதி காலமானாா். இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த அவா், புதன்கிழமை அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து கோ. புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...