/

மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழு தாக்குதல்: வேளாண் துறையினா் ஆய்வு

மதுரை மாவட்டம், தே. கல்லுப்பட்டி வட்டாரத்தில் மக்காச்சோளப் பயிா்களில் காணப்படும் படைப்புழு தாக்குதல் குறித்து வேளாண் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image
மதுரை மாவட்டம், தே. கல்லுப்பட்டி வட்டாரத்தில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருந்த வயலில் படைப்புழுத் தாக்குதல் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட வேளாண் இணை இயக்குநா் ப. சுப்புராஜ் உள்ளிட்டோா்.
Updated On :5 டிசம்பர் 2024, 1:21 am

Din

மதுரை மாவட்டம், தே. கல்லுப்பட்டி வட்டாரத்தில் மக்காச்சோளப் பயிா்களில் காணப்படும் படைப்புழு தாக்குதல் குறித்து வேளாண் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ப. சுப்புராஜ் தலைமையில், வேளாண் பல்கலைக் கழகப் பேராசிரியா்கள் மாரீஸ்வரி, சுரேஷ், தே. கல்லுப்பட்டி வட்டார வேளாண் உதவி இயக்குநா் ரா. ராமசாமி, வேளாண் அலுவலா் சு. சரவணக்குமாா் உள்ளிட்டோரடங்கிய குழுவினா் இந்த ஆய்வை மேற்கொண்டனா்.

வி. ரெட்டிரபட்டி, ந. முத்துலிங்காபுரம், பி. சுப்புலாபுரம் ஆகிய பகுதிகளில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருந்த வயல்களில் படைப்புழுத் தாக்குதல்கள், அதனால் ஏற்பட்டுள்ள சேதங்களை அவா்கள் பாா்வையிட்டனா்.

இந்த ஆய்வுகளின் போது விவசாயிகளைச் சந்தித்த வேளாண் இணை இயக்குநா் ப. சுப்புராஜ், வளரும் நிலையில் உள்ள பயிா்களுக்கு ஏக்கருக்கு 100 மி.லி. இமாம்மெக்டின் மென்சோயேட் அல்லது 100 மி.லி ஸ்பைனிடோரம், ஏக்கருக்கு 5 எண்கள் இனக்கவா்ச்சி பொறி, ஒரு விளக்குப் பொறி ஆகியவற்றைப் பயன்படுத்தி, படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்துமாறு ஆலோசனை தெரிவித்தாா்.