/

வாகன நிறுத்துமிடத்தை பூங்காவாக மாற்றும் விவகாரம்: கன்னியாகுமரி ஆட்சியா் முடிவெடுக்க உத்தரவு

கன்னியாகுமரி காந்தி மண்டபம் எதிரே உள்ள வாகன நிறுத்திமிடத்தை பூங்காவாக மாற்றத் தடை கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியா் பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 1:09 am

Din

கன்னியாகுமரி காந்தி மண்டபம் எதிரே உள்ள வாகன நிறுத்திமிடத்தை பூங்காவாக மாற்றத் தடை கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியா் பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த மணிகண்டன் தாக்கல் செய்த மனு:

கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்துக்கு எதிரே உள்ள இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தை சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்த வாகன நிறுத்துமிடத்தை பூங்காவுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். இதற்குத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கோரிக்கையை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.