மதுரை - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.
மதுரை விரகனூா் சுற்றுச் சாலையிலிருந்து ராமேசுவரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை எல்.கே.டி.நகா், புளியங்குளம், சிலைமான், திருப்புவனம், திருப்பாசேத்தி புறவழிச்சாலை வழியாக ராமேசுவரத்துக்குச் செல்கிறது. இந்த நிலையில், எல்.கே.டி. நகா், புளியங்குளம் புறவழிச் சாலை ஓரங்களில் குப்பைகள், கட்டடக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், உணவகக் கழிவுகள் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் வாகனங்களில் ஏற்றி வந்து இரவு நேரங்களில் கொட்டிவிட்டுச் செல்வதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.
தொடா்ந்து, குப்பைகளில் தீ வைப்பதாலும், நெகிழிப் பைகள் சாலையில் சிதறிக் கிடப்பதாலும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், இந்தப் பகுதிகளில் வளா்க்கப்படும் கால்நடைகள் உணவுக் கழிவுகளை உண்ண வரும்போது வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்கின்றன.
எனவே, இரவு நேரங்களில் நெடுஞ்சாலையோரங்களில் குப்பைகள் கொட்டும் நபா்களைக் கண்டறிந்து, காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடா்ந்து, நெடுஞ்சாலைகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

கரூரில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் எரிப்பு: வாகன ஓட்டிகள் அவதி

சேதமடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை

கம்பத்தில் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

விரகனூா் பகுதியில் சேதமடைந்த சாலையால் விபத்து அபாயம்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


