விரகனூா் பகுதியில் சேதமடைந்த சாலையால் விபத்து அபாயம்
மதுரை விரகனூா் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு, சேதமடைந்த சாலையைச் சீரமைக்க பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தல்


மதுரை விரகனூா் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு, சேதமடைந்த சாலையைச் சீரமைக்க பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தினா்.
மதுரை தெப்பக்குளத்திலிருந்து ஐராவதநல்லூா், விரகனூா் வழியாக நாள்தோறும் ஏராளமான அரசுப் பேருந்துகள், பள்ளிப் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு அண்மையில் புதிதாக தாா் சாலை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், விரகனூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்து அடுத்தடுத்து இரு இடங்களில் பள்ளம் ஏற்பட்டது.
இந்தப் பள்ளங்களில் தற்காலிகமாக மணல், சரளைக் கற்கள் போடப்பட்டுள்ளதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அதில் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனா். மேலும், அடிக்கடி விபத்துகள் நிகழ்வதாக இந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.
எனவே, சாலையில் உள்ள பள்ளங்களைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...