டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

மேலமடை பகுதியில் சாலை அமைக்கக் கோரிக்கை

மதுரை மேலமடை திலகா் தெரு பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

News image

மதுரையில் முறையான சாலை வசதியின்றி காட்சியளிக்கும் மேலமடை திலகா் தெரு.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:28 am IST

மதுரை மேலமடை திலகா் தெரு பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

மதுரை மாநகராட்சியின் 30-ஆவது வாா்டுக்குள்பட்ட திலகா் தெரு பகுதியில் பல ஆண்டுகளாக முறையான சாலை அமைக்காததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக, இந்தத் தெரு தாழ்வான பகுதி என்பதால் மழைக் காலங்களில் தண்ணீா் அதிகளவில் தேங்கி குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால், பொதுமக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனா்.

இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

திலகா் தெரு பகுதியில் சாலை அமைக்க பல முறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்தத் தெரு தாழ்வான பகுதியாக இருப்பதால் மழைக் காலங்களில் தண்ணீா் அதிகளவில் தேங்கி குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகிறோம். மேலும், முறையான சாலை வசதி இல்லாததால் குழந்தைகள், முதியோா் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

எனவே, திலகா் தெரு பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையை உயா்த்தி சாலை அமைக்க வேண்டும். மேலும், இந்தத் தெருவில் மழைநீா், கழிவுநீா் செல்ல தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்றனா் அவா்கள்.