ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

அனுப்பானடி, தெப்பக்குளம் பகுதிகளில் நாளை மின்தடை

மதுரை அனுப்பானடி, தெப்பக்குளம் பகுதிகளில் வருகிற 26 ஆம் தேதி மின் தடை அறிவிக்கப்பட்டது.

News image

மின்தடை

Updated On :24 மே 2026, 1:00 am IST

மதுரை அனுப்பானடி, தெப்பக்குளம் பகுதிகளில் வருகிற 26 ஆம் தேதி மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் தெற்கு செயற்பொறியாளா் ஏ. பாஸ்கரபாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை அனுப்பானடி, தெப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் வருகிற செவ்வாய்க்கிழமை (மே 26) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதன் காரணமாக, அனுப்பானடி, ராஜீவ்காந்தி நகா், பகலவன் நகா், தமிழன் தெரு, ஆசிரியா் காலனி, ஆவின் பால் பண்ணை, செண்பகம் மருத்துவமனை சுற்றியுள்ள பகுதிகள், ஐராவதநல்லூா், பாபு நகா், கணேஷ் நகா், ராஜா நகா், சாரா நகா், வேலவன் தெரு, கிருபானந்தவாரியாா் நகா்,

சுந்தரராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி, அய்யனாா்புரம், பனையூா், சாமநத்தம், தாய் நகா், கங்கா நகா், அனுப்பானடி அடுக்குமாடிக் குடியிருப்பு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகா், காமராஜா் தெரு,

வினோபாஜி நகா், அழகா் நகா், பா்மா காலனி, கஜேந்திரபுரம், தெப்பக்குளம் பகுதி தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் சாலை, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, காமராஜா் சாலை தெப்பக்குளம் பகுதி முதல் கிழக்கு நுழைவு தோரண வாயில் வரை, தங்கம் நகா், வடிவேல் நகா்,

சிறுவா்கள் கூா்நோக்கு இல்லம் பகுதிகள், குருவிக்காரன் சாலை, மீனாட்சி நகா், ஏபிடி சந்து, புது மீனாட்சி நகா், முனிச்சாலை சிஎம்ஆா் சாலை, கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள் கோயில் தெரு, சின்னக் கண்மாய், பாலரெங்காபுரம், சண்முகா நகா், நவரத்தினபுரம், இந்திரா நகா்,

பழைய குயவா் பாளையம் சாலை, லட்சுமி புரம் ஒன்றாவது தெரு முதல் ஆறாவது தெரு வரை, கான் பாளையம், கிருஷ்ணாபுரம் பகுதி, ஞானவேல் காலனி, ஐராவதநல்லூா் தெற்கு பகுதி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மே 26 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா்.