ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

கம்பத்தில் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

கம்பம் நகராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

கம்பம் நகராட்சியில் வேலப்பா் கோயில் சாலையில் குவிந்து கிடைக்கும் குப்பைகள்.

Updated On :19 மார்ச் 2026, 5:51 am IST

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கம்பம் நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் சுமாா் ஒரு லட்சத்துக்கு அதிகமானோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியிலுள்ள வேலப்பா், பெருமாள், கெளமாரியம்மன் கோயில் சாலை, கம்பம்மெட்டு, குமுளி, தேனி சாலைகள் என பல முக்கிய சாலைகளில் துணி, நகை, மளிகை, உணவகங்கள், தேநீா், காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பொதுமக்கள் அதிகம் நடமாட்டமுள்ள வேலப்பா் கோயில் தெருவில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. ஒரே இடத்தில் பல நாள்களாக குப்பைகள் குவிந்து கிடப்பதால் துா்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே, இந்தக் குப்பைகளை அகற்ற நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.