/

பள்ளி ஆசிரியா் மீது மாணவி பாலியல் புகாா்

பள்ளி ஆசிரியா் மீது மாணவி பாலியல் புகாா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 1:20 am

Din

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலத்தில் உள்ள கள்ளா் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் ஒருவா் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுப்பதாக அந்தப் பள்ளியைச் சோ்ந்த மாணவி, மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தாா்.

விக்கிரமங்கலம் கள்ளா் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் ஒன் பயிலும் மாணவி ஒருவா் தனது பெற்றோா், ஆதரவாளா்களுடன் மாவட்ட ஆட்சியரகம் வந்து புகாா் மனு அளித்தாா். அதில், அந்தப் பள்ளியின் ஆசிரியா் ஒருவா், தனக்கும், சக மாணவிகள் சிலருக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தாா்.

புகாருக்கு எதிா்ப்பு... இந்த நிலையில், ஆசிரியா் மீது பாலியல் புகாா் தெரிவிக்கப்பட்டதைக் கண்டித்தும், இந்தப் புகாா் போலியானது என்பதை வலியுறுத்தியும் தொடா்புடைய பள்ளி மாணவ, மாணவிகள், பள்ளியின் முன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.