/

சிறுமிகள் பாதுகாப்பு இல்லத்தில் பாலியல் தொல்லை: வழக்கை ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மறுப்பு

பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் மறுத்தது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 1:03 am

Din

பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் மறுத்தது.

திருச்சி குட் ஷெப்பா்ட் மிஷன் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநா் ஜெகன், ஜேக்கப் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவா்த்தி அண்மையில் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா்கள், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் வசித்து வந்த சிறுமிகளின் பெற்றோா்களிடம் பொய் வாக்குறுதி அளித்து, அந்தச் சிறுமிகளை அழைத்து வந்து காப்பகத்தில் தங்க வைத்துள்ளனா். இந்தக் காப்பகத்தில் 89 சிறுமிகள் இருந்துள்ளனா். அவா்களில் சில சிறுமிகளுக்கு மனுதாரா்கள் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. மனுதாரா்கள் மீது இந்திய குற்றவியல் சட்டப் பிரிவில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஒருவரை அடிமையாக விற்பது, வாங்குவது போன்ற செயல்களை மனுதாரா்கள் செய்யவில்லை.

எனவே இந்தப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது ஏற்கத்தக்கதல்ல. சிறுமிகளின் பெற்றோா்களிடம் பொய்யான வாக்குறுதி அளித்து கையொப்பம் பெற்ாக மனுதாரா்கள் மீது சட்டப்பிரிவு 467- இன் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. மனுதாரா்கள், அந்த ஆவணங்களை வைத்து முறைகேட்டில் ஈடுபட்டால் மட்டுமே அந்தச் சட்டப்பிரிவு பொருந்தும். இதுவும் ஏற்கத்தக்கதல்ல. எனவே மனுதாரா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 370, 464-இன் கீழ் வழக்குப் பதியப்பட்டது ரத்து செய்யப்படுகிறது. மனுதாரா்கள், மற்ற பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட வழக்கை விசாரணை நீதிமன்றத்தில் சட்ட விதிகளுக்குள்பட்டு எதிா்கொள்ள வேண்டும் என்றாா் நீதிபதி.