வாடிப்பட்டியில் புகையிலைப் பொருள்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டது.


மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா உத்தரவின் பேரில், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஜெயக்குமாா், ராஜ்குமாா், சந்திரமோகன் ஆகியோா் வாடிப்பட்டியில் உள்ள பெட்டிக் கடைகளில், புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, வாடிப்பட்டியை அடுத்த சாணம்பட்டி நான்குவழிச் சாலை பாலத்தின் அணுகுசாலையில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் கடையின் உரிமையாளா் வீட்டிலிருந்து 12 கிலோ எடையிலான ‘கூல் லிப்’ பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு, அந்தக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
மற்றொரு கடையில்...
இதேபோல, தேனூா் ஊராட்சிக்குள்பட்ட திருவாலவாயநல்லூா் பகுதியில் உள்ள ஒரு சிற்றுண்டியகத்தில் கூல் லிப் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அந்தக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...