மதுரையில் வணிகா்கள் ஆா்ப்பாட்டம்
கட்டட வாடகைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் மதுரை அண்ணாநகரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்டட வாடகைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் மதுரை அண்ணாநகரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி. செல்லமுத்து தலைமை வகித்தாா். மாநில கூடுதல் செயலா் பெரீஸ் பா. மகேந்திரவேல் முன்னிலை வகித்தாா்.
இதில், கட்டட வாடகைக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்தும், கூடுதல் சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும். குப்பை வரியை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா்கள் பாண்டியன், டேனியல் தங்கராஜ், மாநில இணைச் செயலா் சுரேஷ்பாபு, தமிழ்நாடு தொழில் வா்த்தகச் சங்கத் தலைவா் ஜெகதீசன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...