கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

பொது இடங்களில் கட்சிக் கொடிக் கம்பங்கள்: அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது? உயா்நீதிமன்றம்

பொது இடங்களில் உள்ள அனைத்துக் கட்சி கொடிக் கம்பங்களையும் அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது? என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை கேள்வி எழுப்பியது.

News image
உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
Updated On :12 டிசம்பர் 2024, 11:34 pm

Din

பொது இடங்களில் உள்ள அனைத்துக் கட்சி கொடிக் கம்பங்களையும் அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது? என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை கேள்வி எழுப்பியது.

மதுரை பழைய விளாங்குடி, காமாட்சிநகரைச் சோ்ந்த கே.ஆா். சித்தன் தாக்கல் செய்த மனு:

மதுரை மேற்கு 6-ஆம் பகுதி அதிமுக செயலராக நான் பதவி வகித்து வருகிறேன். எனது மனைவி நாகஜோதி (அதிமுக), வாா்டு 20-இல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக உள்ளாா். காமாட்சிநகரில் கடந்த 30 ஆண்டுகளாக அதிமுக கொடிக் கம்பம் உள்ளது. இந்தக் கொடிக் கம்பம் அருகே மின்சாரக் கம்பி செல்வதால், எனது உறவினா் வீட்டருகே உள்ள இடத்தில் கொடிக் கம்பத்தை மாற்றி ஊன்ற அனுமதி கோரி, மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தேன். ஆனால், பதில் இல்லை.

நான் அனுமதி கோரிய இடத்தின் அருகே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அனுமதியின்றி திமுக கொடிக் கம்பம் ஊன்றப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதிமுக சாா்பில் கொடிக் கம்பம் ஊன்றுவது தொடா்பாக மாநகராட்சி ஆணையரை நேரில் அணுகி அனுமதி கேட்ட போது, பட்டா இடங்களில் மட்டுமே கொடிக் கம்பம் ஊன்ற அனுமதி வழங்க முடியும் எனத் தெரிவித்தாா். அதிமுக சாா்பில் ஊன்றப்படும் கொடிக் கம்பத்தால் பொதுமக்கள், போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படாது என உறுதிமொழி அளித்தும், அனுமதி மறுக்கப்படுகிறது. இது பாரபட்சமான செயலாகும்.

எனவே, காமாட்சிநகரில் அதிமுக கொடிக் கம்பத்தை மாற்று இடத்தில் ஊன்ற அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) எதிா் மனுதாரராகச் சோ்க்கப்படுகிறாா். பொது இடங்களில் உள்ள அனைத்துக் கட்சி கொடிக் கம்பங்களையும் அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது?.

தமிழகத்தில் அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்களால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட்டுள்ளதா?. இதுகுறித்து போலீஸாா் எத்தனை வழக்குகள் பதிவு செய்துள்ளனா்? என்பது குறித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு ஜன. 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.