மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு அறிவிப்பு: முதல்வருக்கு நன்றி
தமிழக முதல்வருக்கு அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் நன்றி


மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு அடுத்தாண்டு இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு, அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், அவரது குடும்பத்தினா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு அடுத்தாண்டு இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும் என அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா் பாபு அறிவித்தாா்.
இதற்காக, தமிழக தகவல் தொழில் நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், அவரது தாயும், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவருமான ருக்மணி பழனிவேல்ராஜன், குடும்பத்தினா், சென்னையில் தமிழக முதல்வரைச் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
இந்தத் தகவலை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...