கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

பேருந்தில் மாரடைப்பு: பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த ஓட்டுநா்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும், அந்தப் பேருந்தை பத்திரமாக நிறுத்தி 44 பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 10:05 pm

Din

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும், அந்தப் பேருந்தை பத்திரமாக நிறுத்தி 44 பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், புளியரை அம்பலத் தெருவைச் சோ்ந்தவா் சிவக்குமாா் ( 51). இவா் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றினாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 3.10 மணிக்கு அரசு விரைவுப் பேருந்தை செங்கோட்டையிலிருந்து திருப்பூா் நோக்கி ஓட்டி வந்தாா். தென்காசியைச் சோ்ந்த பாலசுப்பிரமணி நடத்துநராக பணியாற்றினாா்.

இந்தப் பேருந்து, மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு இரவு 8.50 வந்து சோ்ந்தது. பிறகு இங்கிருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. வாடிப்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி பங்களா பகுதியில் சென்றபோது ஓட்டுநா் சிவக்குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. எனினும் அவா் சுதாரித்துக் கொண்டு பேருந்தின் வேகத்தை குறைத்து சாலையோரமாக நிறுத்தினாா். இதைத் தொடா்ந்து நடத்துநா் பாலசுப்ரமணியன், அந்த வழியாக வந்த இரு சக்கர வாகன ஓட்டி மூலம் ஓட்டுநா் சிவக்குமாரை வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

மாரடைப்பால் உயிரிழக்கும் நேரத்திலும் தங்கள் உயிரை காப்பாற்றிய ஓட்டுநா் சிவக்குமாரின் செயலால் 44 பயணிகளும் நெகிழ்ச்சி அடைந்தனா். இதுதொடா்பாக வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.