கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

கஞ்சா கடத்தல் வழக்கு: தந்தை, மகனுக்கு பிணை

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளான தந்தை, மகன் மீது பதியப்பட்ட கஞ்சா கடத்தல் வழக்கில், அவா்களுக்கு பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 10:05 pm

Din

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளான தந்தை, மகன் மீது பதியப்பட்ட கஞ்சா கடத்தல் வழக்கில், அவா்களுக்கு பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம், விழுந்தமாவடி ஊராட்சியைச் சோ்ந்த மகாலிங்கம், அவரது மகன் அலெக்ஸ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

விழுந்தமாவடி ஊராட்சி மன்றத் தலைவராக நானும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக எனது மகன் அலெக்ஸும் பதவி வகித்து வருகிறோம். நாங்கள் இருவரும் பி.ஆா்.புரம் புதுப்பாலம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாகவும், கடத்தலுக்கு முயற்சித்ததாகவும் எங்கள் மீது கீழையூா் போலீஸாா் பொய் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கு தஞ்சாவூா் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நீதிமன்ற விசாரணைக்கு உள்பட்டது. எங்களது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த வழக்கு பதியப்பட்டது. எனவே, இந்த வழக்கில் முதல் எதிரியாகச் சோ்க்கப்பட்ட மகாலிங்கமாகிய எனக்கு பிணையும், எனது மகன் அலெக்ஸுக்கு முன்பிணையும் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பு வழக்குரைஞா்கள், மனுதாரா்களில் ஒருவரான மகாலிங்கம் ஊராட்சி மன்றத் தலைவராகவும், அவரது மகன் ஊராட்சி ஒன்றிய உறுப்பினராகவும் பதவி வகித்து வருகின்றனா். இவா்கள் மீது அரசியல் காழ்ப்புணா்வால் போலீஸாா் பொய் வழக்கு பதிவு செய்தனா். எனவே, இருவருக்கும் பிணை, முன்பிணை வழங்க வேண்டும் என்றனா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

கடந்த 2023-ஆம் ஆண்டு மனுதாரா், அவரது தந்தை மீது போதைப் பொருள் தடுப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் அவா்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. தந்தையும் மகனும் உள்ளாட்சித் தோ்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கின்றனா். அந்தப் பகுதி மக்களுக்காக வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றக் கோரி போராட்டங்களும் நடத்தியுள்ளனா்.

தந்தை, மகன் மீது ஏற்கெனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டதால், இது போன்று வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றனவா?. இந்த வழக்கில் பல்வேறு நிபந்தனைகளுடன் மகாலிங்கத்துக்கு பிணையும், அவரது மகன் அலெக்ஸுக்கு முன்பிணையும் வழங்கப்படுகிறது என்றாா் நீதிபதி.